\
இந்தி நடிகையை காதலிக்கிறார் கே.எல்.ராகுல்?

இந்தி நடிகையை காதலிக்கிறார் கே.எல்.ராகுல்?

இந்தி நடிகையை காதலிக்கிறார் கே.எல்.ராகுல்?
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக ரன்களை விளாசி கவனிக்க வைத்தார். இந்நிலையில் இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கே.எல்.ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

நிதி அகர்வால், முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யாசாட்சி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார். இந்தக் காதல் பற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com