டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைத்த கே.எல்.ராகுல்
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. முதலில் களமிறங்கிய ராகுல், தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் ரன்கள் குவித்தனர். ராகுல் 67 பந்துகளில் தனது 9ஆவது அரைசதத்தை அடித்தார். அதுமட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த எவர்டான் வீக்ஸ், ஷிவநாரன் சந்தர்பால், ஜிம்பாவே அணியை சேர்ந்த ஆண்டி ஃப்ளவர், இலங்கை அணியை சேர்ந்த குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதத்தைப் அடித்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார் கே.எல்.ராகுல்.
இதையடுத்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் 135 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்களை எடுத்தது.