சுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி

சுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி
சுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில், மணிஷ் பாண்டே 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக வார்னர் 36, சாஹா 30 ரன்கள் எடுத்தனர்.

143 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும் சுப்மன் கில், ரானா ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. அதிரடியாக விளையாடிய ரானா 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த இயான் மோர்கன் சுப்மன் கில்லுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றார். இறுதியில், 18 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியடைந்தது.

கொல்கத்தா அணியில் சுப்மன் கில் 70 ரன்களுடனும், மோர்கன் 42 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com