KKR VS MI : 150வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் பொல்லார்ட் 

KKR VS MI : 150வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் பொல்லார்ட் 

KKR VS MI : 150வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் பொல்லார்ட் 
Published on

ஐபிஎல் என்றாலே அதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்ததாக இருக்கும். 

ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என சர்வ வல்லமை படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒருவராவது விளையாடுவது வழக்கம். 

இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொல்லார்டுக்கு கொஞ்சம் ஓவர் டியூட்டி தான். 

கடந்த 2010 முதல் ஐபிஎல் சீசனில் மும்பைக்காக விளையாடி வரும் பொல்லார்ட் கொல்கத்தாவுடன் ஷார்ஜாவில் விளையாடி வரும் ஆட்டத்தையும் சேர்த்து மொத்தமாக 150 போட்டிகளில் விளையாடிவர் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார். 

இதுவரை மும்பைக்காக 150 ஐபிஎல் போட்டிகளில் 2773 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 146.64. பவுலிங்கிலும் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்த சீஸனிலும் பொல்லார்ட் மும்பை அணியின் மேட்ச் வின்னராக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com