\
KKR vs MI : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு!

KKR vs MI : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு!

KKR vs MI : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு!
Published on: 

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணி இந்த சீசனின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இருந்தது. 

அந்த அணியின் டாப் ஆர்டர் செம ஸ்ட்ராங்காக உள்ளது. கில், ராணா, திரிபாதி என மூவரும் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த போட்டியைபோலவே இந்த போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை அணி இந்த போட்டியில் முதலில் பேட் செய்கிறது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் டெத் ஓவர்களில் அதிக ரன்களை சேர்க்க தவறியது மும்பை. பொல்லார்ட், பாண்ட்யா சகோதரர்கள் நிச்சயம் இந்த போட்டியில் அந்த தவறை திருத்திக் கொள்வார்கள் என நம்பலாம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com