கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்திற்காக அந்த அணி கேப்டன் இயான் மோர்கனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஐபிஎல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தியது. இதில் கொல்கத்தா அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக்கூறி அந்த அணி கேப்டன் இயான் மோர்கனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட புகாரில் சென்னை அணி கேப்டன் தோனிக்கும் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஏற்கனெவே தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் புகார் தொடர்ந்தால் அணியின் கேப்டன் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com