அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர்: முழு விவரம்

அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர்: முழு விவரம்

அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர்: முழு விவரம்
Published on

இந்தியாவின் இளம் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர், எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரை அந்த ஃப்ரான்சைஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. நடப்பு ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் கேட்கப்பட்ட வீரராகி உள்ளார் ஷ்ரேயஸ். 

கேப்டன்சி திறன் கொண்ட பேட்ஸ்மேன் அவர். கொல்கத்தாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருப்பார் என்ற கணக்கில் பிக் செய்யப்பட்டுள்ளார். 87 போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயஸ் 2375 ரன்கள் எடுத்துள்ளார். 

தற்போது நல்ல பார்மிலும் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கையாகவும் ஜொலித்து வருகிறார். 2015 முதல் டெல்லி அணியில் விளையாடி வந்த ஷ்ரேயஸ் எதிர்வரும் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com