32 ரன்களுக்குள் 5 விக்கெட் காலி... முகமது சிராஜ்-ன் மாஸ் பவுலிங்கில் சரிந்த கொல்கத்தா!

32 ரன்களுக்குள் 5 விக்கெட் காலி... முகமது சிராஜ்-ன் மாஸ் பவுலிங்கில் சரிந்த கொல்கத்தா!
32 ரன்களுக்குள் 5 விக்கெட் காலி... முகமது சிராஜ்-ன் மாஸ் பவுலிங்கில் சரிந்த கொல்கத்தா!

அபுதாபியில் நடைபெற்று வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்து வருகிறது.

முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை பெங்களூருவுக்கு செட் செய்யலாம் என கணக்கு போட்டிருந்தார் அந்த அணியின் கேப்டன் மோர்கன். ஆனால் அந்த கணக்கை தப்பு கணக்கு என தனது பவுலிங் மூலம் மிரட்டி விட்டார் பெங்களூரு பவுலர் முகமது சிராஜ்.

இரண்டாவது ஓவரை வீசிய சிராஜ் கொல்கத்தாவின் ராகுல் திதிரிபாதிக்கு அவுட்சைட் ஆப் ஸ்டெம்ப் திசையில் குட் லென்த் டெலிவரி வீசியிருந்தார். அதை ஆட முயன்ற திரிபாதியின் பேட்டில் பட்ட பந்து எட்ஜாகி கீப்பர் டிவில்லியர்ஸின் கைகளை சேர்ந்தது. 

அடுத்த பந்திலேயே நித்திஷ் ராணாவின் ஆப் ஸ்டெம்பை பார்த்து வீசி போல்டாக்கி வெளியேற்றி இருந்தார் சிராஜ். தொடர்ந்து ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசிய சிராஜ் ஃபுள் லென்த் டெலிவரி வீசி டாம் பேண்டனை அவுட் செய்தார்.

ரசிகர்களின் நகைப்புக்கு பல நாட்கள் உள்ளான சிராஜ் இன்றைய ஆட்டத்தின் மூலம் அதற்கு தீர்வு கொடுத்துவிட்டார்.

மூன்று ஓவர்கள் வீசிய சிராஜ் மூன்று விக்கெட்டை வீழ்த்தி வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதில் 16 டாட் பால்கள் அடங்கும். 32 ரன்கள் எடுப்பதற்குள் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com