\
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 142 ரன்களில் சுருக்கிய கொல்கத்தா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 142 ரன்களில் சுருக்கிய கொல்கத்தா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 142 ரன்களில் சுருக்கிய கொல்கத்தா
Published on

அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இந்த சீஸனின் எட்டாவது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பெரிய ஸ்கோரை அடிப்பார்கள் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே சுருக்கி விட்டார்கள் கொல்கத்தா பவுலர்கள். 

மும்பை உடனான போட்டியில் லைனை டோட்டலாக மிஸ் செய்த கொல்கத்தா பவுலர்கள் இம்முறை அந்த சிக்கலுக்கு தீர்வு கண்டுள்ளனர். 

மொத்தம் 40 டாட் பால்களை கொல்கத்தா பவுலர்கள் வீசியிருந்தனர்.

நரேன், வருண் சக்கரவர்த்தி, பேட் கம்மின்ஸ் அற்புதமாக பந்து வீசியிருந்தனர்.

ஹைதராபாத் அணிக்கு மணீஷ் பாண்டேவின் ஆட்டம் மட்டுமே ஆறுதல் கொடுத்தது. இருபது ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 142 ரன்களில் சுருக்கியிருந்தனர் கொல்கத்தா பவுலர்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com