விளையாட்டு
மீண்டும் சர்ச்சைக்குள்ளான நரைனின் பவுலிங் ஆக்ஷன்... நடந்தது என்ன?
மீண்டும் சர்ச்சைக்குள்ளான நரைனின் பவுலிங் ஆக்ஷன்... நடந்தது என்ன?
கொல்கத்தா அணிக்காக நடப்பு சீசனில் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனின் பவுலிங் ஆக்ஷன் மீது அவ்வபோது சர்ச்சை எழுவது வழக்கம்.
இந்த சீசனில் பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தின் போது அவரது பவுலிங் ஆக்ஷன் ஐசிசி-யின் விதிமுறையை மீறி இருப்பதாக அம்பயர்கள் சந்தேகித்தனர். அதுகுறித்து புகாரும் அளித்தனர்.
அதனையடுத்து மீண்டும் சந்தேகத்திற்குளாகும் வகையில் பந்து வீசினால் நரைன் தடையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு பந்தையும் 90 கி.மீ வேகத்தில் புதிய ஆக்ஷனில் நரைன் வீசினார். அதனால் அவரது பவுலிங் ஆக்ஷன் மீண்டும் மீண்டும் சந்தேகத்திற்கு இடம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவருக்கு சிக்கலை கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.