IPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்?

IPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்?
IPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்?

ஐபிஎல் தொடரில் எதிர்பார்ப்பு உள்ள அணிகளுள் ஒன்றாக திகழ்வது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பலம் வாய்ந்த அணிகளை கூட எளிதாக வெல்லும் வல்லமை படைத்த கொல்கத்தா அணி, மிகப் பெரும் டார்கெட்டை கூட எதிர்த்து அடித்து வெல்லும் திறமை கொண்ட அணியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பலத்துடன் இருந்தாலும், சென்னையிடம் தோற்றதால் இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட இருக்கிறது. அதேசமயம் இதுவரை ஒருமுறை கூட விளையாடாத கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி எப்படி ஆடும் என்ற கணிப்பு இருக்காததால் அவர்களின் திட்டம் குறித்து களத்தில் தான் தெரியவரும்.

மும்பை அணியை பொறுத்தவரை கடந்த இருந்த அணியில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. அந்த அணியில் ஜேம்ஸ் பட்டிசனுக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் மிட்செல் மெக்லனகன் அல்லது நாதன் கல்டெர் நைல் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. மற்றபடி மும்பையில் அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிய வருகிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரையில் இன்னும் அந்த அணியின் ப்ளேயிங் 11 அறிவிக்கப்படவில்லை. கணிப்புகளின்படி பார்த்தால் அந்த அணியில், கடந்த முறை தொடர்ந்து தொடக்க வீரராக களம் கண்ட  கிரிஸ் லின் இந்த முறை அந்த அணியில் இல்லை. எனவே அவருக்கு பதிலாக சுப்மான் கில் களமிறக்கப்படலாம். அவருடன் சுனில் நரைன் தொடக்க வீரராக ஆட வாய்ப்புண்டு.

கடந்த முறை 3வது வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பாவும் இந்த முறை இல்லை என்பதால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் களமிறங்குவார் எனத் தெரிகிறது. அவரைத்தொடர்ந்து எப்போதும் போல 4-வதாக நிதிஷ் ரானாவும், அவரைத்தொடர்ந்து ஆண்ட்ரிவ் ரஸல்லும் பேட்டிங் செய்ய வாய்ப்புண்டு. கொல்கத்தா அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய ஆல்ரவுண்டர் என்பதால், இந்த முறையும் பரிசுத் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். பவுலர்களில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ராகுல் திரிபாதி மற்றும் பட் கம்மின்ஸ் ஆகியோர் விளையாடலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 25 ஐபிஎல் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இதில் 19 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 6 முறை மட்டுமே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றிருக்கிறது. மும்பை அணியில் குயிண்டான் டி காக், ரோகித் ஷர்மா பேட்டிங்கில் ஜொலிக்கலாம். சூர்யகுமார் குறிப்பிடத்தகுந்த ரன் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யாவும், பவுலரில் ட்ரெண்ட் போல்ட்-ம் டஃப் கொடுக்கலாம். பும்ரா பந்து வீச்சு கூடுதல் பலமாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மான் கில், இயான் மார்கன் ஆகியோரும், ஆல்ரவுண்டரில் ஆண்ட்ரிவ் ரஸல்லும் அணிக்கு பலம் சேர்க்க வாய்ப்புண்டு. பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் பட் கம்மின்ஸ் பந்துகளை எதிர்கொள்வதில் கடினம் இருக்கும். கணிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது மும்பை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். இருப்பினும் ஐபிஎல் போட்டியில் வெற்றி தோல்வி என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com