டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் !

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் !
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் !

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

இந்த இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அணியில் இன்றையப் போட்டியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பன்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல் மற்றும் கலீல் அகமது.

நியூசிலாந்து அணியில் செய்பிரட், முன்ரோ, வில்லியம்சன், மிட்சல், ராஸ் டெய்லர், கிராண்ட் ஹோம், சான்ட்னர், குஜலேன், சவுதி, சோதி, பெர்க்யூசன். இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முனைப்பில் இந்திய உள்ளது. அதேநேரம், தாய்மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில்தான் தோற்றுவிட்டோம், டி20 தொடரிலாவது வெல்ல வேண்டும் என நியூஸிலாந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. 

போட்டி தொடர்பாக பேசியுள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “கடந்த டி20 போட்டி சிறப்பான ஒன்று. இது அனைத்தையும் திருப்திபடுத்தும் வகையிலும் அமைந்தது. நாங்களும் இந்திய அணியும் திறமைகளை பரிமாறிக்கொண்டோம். இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை எங்கள் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அதன்படியே நாங்கள் வென்று முன்னேறிச்செல்வோம்” என நம்பிக்கை தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com