பதிலடி கொடுக்க காத்திருக்கும் நியூசிலாந்து ! இந்தியா பதுங்குமா பாயுமா ?
இந்திய-நியூஸிலாந்து எதிரான முதல் டி20 ஒருநாள் போட்டி நாளை வில்லிங்டானில் உள்ள நெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்ரு மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றிப் பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதால், கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. இதனால் ரோகித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார். விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினார். அதேபோன்று நாளைய டி20 போட்டியிலும் கோலி விளையாடவில்லை. இதனால் அந்த இடத்தில் சுப்மன் கில் அல்லது ரிஷப் பந்த் களமிறக்கப்படலாம் எனப்படுகிறது. நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில் அணியில் இல்லை. எனவே அந்த இடத்தில் கேப்டன் வில்லியம்சனே களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பில் ரிஷப் பன்ட்
ஒரு நாள் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. தற்போது டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது திறமையை நிரூபிக்க முயல்வார். இதன் மூலம் உலகக் கோப்பைக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் மூத்த வீரர் தோனி இடம்பெறவில்லை. தற்போதைய தொடரில் இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திடும் தினேஷ் கார்த்திக் இந்த டி20 வாய்ப்பை எப்படி பயன்படுத்துவார் என்பதும் தெரிகிறது.
அதேபோல கோலியால் புகழப்பட்ட ஷுப்மன் கில், இரணடு ஒருநாள் ஆட்டங்களில் சரிவர ஆடவில்லை. டி20 தொடரில் அவர் சிறப்பாக ஆடினால் மட்டுமே தொடர்ந்து அணியில் இடம் பெற முடியும். மேலும் வேகப் பந்து வீச்சை பொறுத்தவரை சிராஜ், கலீல் அகமது , ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியா, பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கெளல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இல்லாத நிலையில் சிராஜ், கலீல் அகமது ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து
ஒரு நாள் தொடரை இழந்து வேதனையில் இருக்கும் நியூஸி. அணி டி20 தொடரை கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. கடந்த 2008-09-இல் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 2-0 என நியூஸிலாந்து கைப்பற்றி இருந்தது. கடந்த 2017-18-இல் இந்தியாவில் நடைபெற்ற தொடரை தோற்றது. நியூஸி. போட்டி நடைபெறும் வெஸ்ட்பாக் மைதானத்தின் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பவுல்ட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி :
ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், சும்பன் கில், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்ட்யா அல்லது கேதர் ஜாதவ், புவனேஷ்குமார், கலீல் அகமது, சாஹல் அல்லது குல்தீப்.
நியூஸிலாந்து அணி :
கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோலின் முன்ரோ, டிம் செஃபெர்ட், ராஸ் டைலர், ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராந்தோம், மிட்செல் சாண்ட்நேர், ஷ்காட் குக்கிலைஜின், ப்ரூஷ்வெல், லக்கி ஃபெர்கசன் அலல்து டிம் சவுதி, ஈஸ் சோதி.