சரிந்த அணியை அதிரடியால் மீட்ட ஹூடா - சென்னைக்கு 154 ரன் இலக்கு!

சரிந்த அணியை அதிரடியால் மீட்ட ஹூடா - சென்னைக்கு 154 ரன் இலக்கு!
சரிந்த அணியை அதிரடியால் மீட்ட ஹூடா - சென்னைக்கு 154 ரன் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் நிதானமாக விளையாட, மயங்க் அகர்வால் சற்றே அதிரடியாக விளையாடினார். 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார் மயங்க்.

பின்னர், கே.எல்.ராகுலுடன் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 27 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரானும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இந்த சீசனில் தொடர்ந்து அசத்தாலாக விளையாடி வந்த கெயிலும் தாஹிர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதனால், பஞ்சாப் அணி 72 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.

16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. மந்தீப் சிங்கும், ஹூடாவும் சரிவில் இருந்த அணியை மீட்க போராடினர். சற்று நேரம் தாக்குப்பிடித்த மந்தீப் சிங் 14 (15) ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நீஷம் 2 ரன்னில் நடையைக்கட்டினார். சிறப்பாக விளையாடிய ஹூடா 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஹூடா, 30 பந்துகளில் 62 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும்.

சென்னை அணி சார்பில் நிகிடி 3 விக்கெட் சாய்த்தார். சென்னை அணியில் இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதோடு தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். தீபக் சாஹர் 3 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்-க்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். சிஎஸ்கே ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com