KING OF CLAY: 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ரபேல் நடால்!

KING OF CLAY: 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ரபேல் நடால்!
KING OF CLAY: 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ரபேல் நடால்!

நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, 14வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி அசத்தினார் ரபேல் நடால்.

இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று தான் “KING OF CLAY” என்பதை மீண்டும் நிரூபித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 8ஆம் நிலை வீரரான காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். காஸ்பர் ரூட்டை வீழ்த்த நடாலுக்கு 2 மணி நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதராக ஆண்ட்ரெஸ் கிமெனோ 1972 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 34 ஆண்டுகள் 305 நாட்களில் பிரெஞ்ச் ஓபனை அவர் வென்று இருந்தார். இன்று 36 வயதான நடால் பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் ஆண்ட்ரெஸ் சாதனையை முறியடித்து ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் வென்ற மிக வயதான மனிதர் ஆனார்.

ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை நடால் கைப்பற்றுவது இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி நடால் தனது 2வது ஆஸ்திரேலிய ஓபன் கிரீடத்தை வென்றார்.

இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம், நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இவருக்கு அடுத்த இடத்தில் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் சம நிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com