60 ஆண்டுகளில் முதல்முறை.. இளம் வயது சாம்பியன் ஆன இத்தாலி வீரர்!
இத்தாலியின் மோன்சாவில் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின், ஃபார்முலா 1 பந்தயம் நடைபெற்றது. இதில், தகுதிச் சுற்றின் காரணமாக 19-வது இடத்தில் இருந்து பந்தயத்தைத் தொடங்கிய மெர்சிடிஸ் அணியை சேர்ந்த கிமி அன்டோனெல்லி முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். அவர், தனது அணி வீரரும் சாம்பியன்ஷிப் போட்டியில் தனக்கு கடும் போட்டியாளராக இருந்த ஜார்ஜ் ரஸ்ஸலுடன் முன்னிலைக்கான கடும் போட்டியில் ஈடுபட்டார்.
பந்தயம் முடிய மூன்று சுற்றுகள் இருந்த நிலையில் ரஸ்ஸலை முந்தி சென்ற அன்டோனெல்லி, கடந்த 60 ஆண்டுகளில் மோன்சாவில் வெற்றி பெற்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை கிமி அன்டோனெல்லி பெற்றார். இதற்கு முன்பு 1966-இல் ஃபெராரி அணிக்காகப் போட்டியிட்ட லுடோவிகோ ஸ்கார்ஃபியோட்டி (Ludovico Scarfiotti) மோன்சாவில் வெற்றி பெற்றிருந்தார். வெற்றி பெற்ற பிறகு அன்டோனெல்லி, "இது ஒரு கனவு போல இருக்கிறது. நம்பவே முடியவில்லை, நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; இன்று இந்த நிலையில் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்றார்.

