கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் மரணமா? - வதந்தியால் அதிர்ந்த கிரிக்கெட் உலகம்!

கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் மரணமா? - வதந்தியால் அதிர்ந்த கிரிக்கெட் உலகம்!
கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் மரணமா? - வதந்தியால் அதிர்ந்த கிரிக்கெட் உலகம்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் கார் விபத்தில் உயிரிழந்ததாக பரவிய போலி வீடியோவை கண்டு கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

33 வயது பொலார்ட், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 113 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் 531 டி20 ஆட்டங்களில் விளையாடி மகத்தான டி20 வீரராகவும் அறியப்படுகிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட நாளாக விளையாடி வருவதால் இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகியுள்ளார். மிக முக்கியமாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கார் விபத்தில் பொலார்ட் பலியானதாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது. யூடியூபில் இதுதொடர்பாக வீடியோவும் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எனினும் இது வதந்தி என்பதை ரசிகர்கள் பிறகு அறிந்துகொண்டார்கள். தவறான செய்தியைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் எனப் பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

பொல்லார்ட் தற்போது அபுதாபி டி10 போட்டியில் விளையாடி வருகிறார். டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார். சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஆனாலும் இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என தெரியவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com