சிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி

சிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி
சிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி

‘நான் சிறப்பாக பந்துவீசுவதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் தான் காரணம்’ என்று வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளும் ஒரு நாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கவுகாத்தியில் நாளை நடக்கிறது. இரண்டாவது போட்டி, 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் ராஜஸ்தானை சேர்ந்த வேகப்பந்துவீச்சா ளர் கலீல் அகமது இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே, புவனேஷ்வர்குமார்,  பும்ரா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கலீல் அகமதுவுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கடும் என்று தெரிகிறது.

இந்நிலையில் கலீல் அகமது செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானேன். அது முதல் தொடர் என்பதால் எனக்கு பதட்டம் இருந்தது. அழுத்தம் இருந்தது. இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டேன். இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். நான் நன்றாக பந்துவீசுவதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கானும் காரணம். டெல்லி டேர்டெ வில் ஸ் அணியில் இருந்தபோது அவரோடு அதிக நேரம் செலவிடுவேன். அவர் கொடுத்த ஆலோசனைகளைப் பயன்படுத்தி பந்துவீசுவேன். 

வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி பந்துவீசுவது என்பதை அவர்தான் கற்றுக்கொடுத்தார். அதன் காரணமாகத்தான் சிறப்பான பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறேன். தேசிய அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லை. எல்லோரும் சமமாகத்தான் பார்க்கிறார்கள். எல்லோரி டமும் பேசுவது போலவே என்னிடமும் பேசுகிறார்கள். என் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறார்கள். வருகிற ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தினால், எனது நம்பிக்கை அதிகரிக்கும். உலகக் கோப்பை தொடரில் எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த நம்பிக்கை என் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com