ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருந்தது. அதனை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பான வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர் மீதான வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com