விளையாட்டு
கேரளாவில் வண்ணமயமான கால்பந்து ரசிகர்களின் ஊர்வலம்
கேரளாவில் வண்ணமயமான கால்பந்து ரசிகர்களின் ஊர்வலம்
உலக கோப்பைக் கால்பந்து போட்டிகளை வரவேற்று தேக்கடியில் கால்பந்தாட்ட ரசிகர்கள் வண்ணக்கோலம் கொண்ட ஆடைகளை அணிந்து மேளதாளம் முழங்க ஊர்வலம் சென்றனர்.
ரஷ்யாவில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதனை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம் குமுளியில் கால்பந்தாட்ட ரசிகர்கள் மேள தாளங்களுடன் ஊர்வலம் சென்றனர்.
இதில் ரசிகர்கள், ரசிகைகள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கால் பந்தாட்டத்தில் பங்கேற்கும் நாடுகளின் உடைகள் அணிந்து மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் சிலர் கால்பந்தாட்ட வீரர்களின் வேடமணிந்தும், வண்ணங்கள் பூசியும் ஆரவாரம் செய்தனர். வழி நெடுகிலும் கால்பந்தாட்ட ரசிகர்களின் ஊர்வலத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

