FIFA 2022: கால்பந்து போட்டியை பார்க்க இப்படியொரு ஏற்பாடா? - அசர வைத்த கேரளா ஃபேன்ஸ்!

FIFA 2022: கால்பந்து போட்டியை பார்க்க இப்படியொரு ஏற்பாடா? - அசர வைத்த கேரளா ஃபேன்ஸ்!
FIFA 2022: கால்பந்து போட்டியை பார்க்க இப்படியொரு ஏற்பாடா? - அசர வைத்த கேரளா ஃபேன்ஸ்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று (நவ.,20) கோலாகலமாக தொடங்கிய 2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி டிசம்பர் 18ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

கால்பந்தாட்ட உலகின் உச்ச நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருப்பதால் நடப்பாண்டு போட்டியின் மீது கால்பந்தாட்ட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தே இருப்பதில் மிகையாகாது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பி பார்க்கப்படுவது கால்பந்து போட்டிகள்தான். குறிப்பாக மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஃபுட்பாலுக்கென எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.

கால்பந்து மீதான அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கேரளாவை சேர்ந்த 17 பேர் கொண்ட ரசிகர்கள் நடப்பு ஃபுட்பால் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்காகவே 23 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு வீட்டை வாங்கி, அதனை ஃபுட்பால் தீமிற்கு ஏற்ப மாற்றியும் அமைத்திருக்கிறார்கள்.

கடந்த 15-20 ஆண்டுகளாக கேரளாவைச் சேர்ந்த அந்த 17 பேரும் ஒன்றுகூடி தவறாது எல்லா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளையும் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்களாம்.

ஆனால் ஒருவரின் வீட்டுக்குள் அனைவரும் ஒன்றுகூடி ஃபுட்பால் போட்டியை பார்ப்பது பலவகைகளில் சாத்தியமில்லாமல் போனதால் ஒரு வீட்டையே வாங்கி அங்கு பெரிய திரை அமைத்து கால்பந்து போட்டியை காண முடிவெடுத்து சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

புதிதாக வாங்கிய அந்த வீட்டுக்கு அர்ஜெண்டினா, போர்ச்சுகல், பிரேசில் ஆகிய ஃபுட்பால் அணிகளின் நிறங்களில் பெயின்ட் அடித்து, நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரின் பேனர்களையும் வைத்து அசத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, “முரட்டுத்தனமான ஃபுட்பால் ஃபேன்ஸாக இருப்பாங்க போலவே” என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com