கேல் ரத்னா, அர்ஜூனா விருது தேர்வுக் குழுவில் விரேந்திர சேவாக்

கேல் ரத்னா, அர்ஜூனா விருது தேர்வுக் குழுவில் விரேந்திர சேவாக்

கேல் ரத்னா, அர்ஜூனா விருது தேர்வுக் குழுவில் விரேந்திர சேவாக்
Published on

கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் 12 பேர் கொண்ட தேர்வுக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே.தாக்கூர் தலைமையிலான இந்த குழுவினர் ஆகஸ்ட் 3ல் கூடி நடப்பாண்டில் விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சேவாக், பி.டி.உஷா தவிர குத்துச் சண்டை வீரர் முகுந்த் கிலேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பத்திரிகையாளர்கள் எம்.ஆர்.மிஸ்ரா, எஸ்.கண்ணன் மற்றும் சஞ்சீவ் குமார், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com