தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் தோனி, மேலும் ஒரு சாதனையை படைத்தார்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இந்தப் போட்டியில் 124 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விராத் கோலி, அபாரமாக சதம் அடித்தார். இப் போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி புதிய மைல்கல்லை எட்டினார்.
தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரமை அவர் ஸ்டம்பிங் மூலம் நேற்று அவுட் ஆக்கினார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 400 வீரர்களை, விக்கெட் கீப்பராக ஆட்டமிழக்க செய்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையயும் தோனி படைத்தார்.
இந்தப்பட்டியலில் இலங்கையின் சங்ககாரா (482), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472) தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.