”இப்படியெல்லாம் வீரர்களுக்கு உடற்பயிற்சி சோதனை வைக்காதீர்கள்” - கவாஸ்கர் சொன்ன அட்வைஸ்

”இப்படியெல்லாம் வீரர்களுக்கு உடற்பயிற்சி சோதனை வைக்காதீர்கள்” - கவாஸ்கர் சொன்ன அட்வைஸ்
”இப்படியெல்லாம் வீரர்களுக்கு உடற்பயிற்சி சோதனை வைக்காதீர்கள்” - கவாஸ்கர் சொன்ன அட்வைஸ்

கிரிக்கெட்டை பொறுத்தவரை வீரரைத் தேர்வு செய்யும்போது அவருடைய உடற்தகுதியை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்திய அணியில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “உடற்தகுதி என்பது தனிப்பட்ட ஒன்று. சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உடற்தகுதி மாறுபடும். அதுபோல விக்கெட் கீப்பர்களுக்கு அதிகமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சற்றுக் குறைவாகவும் அது மாறுபடும். இதனால் யோ-யோ (ஆட்களுக்கான அணித் தேர்வில் மேற்கொள்ளப்படும் ஓட்டம் உள்ளிட்ட கடின பயிற்சி) மற்றும் டெக்ஸா (உடலின் கொழுப்பு, நீர்ச்சத்து, எலும்பின் அடர்த்தியைப் பரிசோதனை செய்வது) உள்ளிட்ட உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒரு வீரரை மதிப்பிடுவதற்கு கிரிக்கெட் உடற்தகுதி மட்டுமே முக்கிய அளவுகோலாக இருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் இந்த தேர்வில் தோல்வியுற்றால், அந்தத் தனி நபர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. ஆக, கிரிக்கெட்டில் உடற்தகுதியை மட்டுமே முதன்மையானதாகக் கருத வேண்டும்.

ப்ரித்வி ஷா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட சில வீரர்கள், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், யோ - யோ பயிற்சியில் தோல்வியடைந்தனர். ஆக, யோ - யோ பயிற்சியின் மூலம் ஒரு வீரரை மதிப்பிடுவது சிறந்ததல்ல. அத்தகைய பயிற்சியில் இருக்கும் சிரமம் காரணமாக சிலருக்கு வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே ஆகியோர் யோ-யோ பயிற்சியில் வெற்றிபெற்றாலும் அதை விரும்புவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com