விரைவில் வருவேன்: ஆபரேஷனுக்கு பின் கேதர் ஜாதவ் ட்விட்!
இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று அவர் தெரிவித் துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ். அல் ரவுண்டரான இவர், கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சென் னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, கேதர் ஜாதவ் காயமடைந்து வெளியேறினார். சென்னை அணி வெற்றி பெறு மா என்று திண்டாடிய போது, காயத்துடன் வந்த கேதர் ஜாதவ் கடைசி ஓவரில், சிக்சரும் பவுண்டரியும் அடித்து வெற்றி பெற வைத்தார்.
இதுபற்றி பேசிய கேதர் ஜாதவ், ’சிஎஸ்கே வெற்றியின் மூலம் மனரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாலும், உடல்ரீதியாக காயமடைந்திருக்கிறே ன். அடுத்த சில வாரங்கள் என்னால் விளையாட முடியாது’ என்றார். இதையடுத்து காயம் பலமாக ஆனதால் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட தகவலை ட்விட்டரில் தெரி வித்துள்ளார்.
’அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு எந்த தகவலையும் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை. நீங்கள்தான் என் பலம். என்னை உற்சாகப் படுத்துபவர்கள். தொடர்ந்து என் ஃபிட்னஸ் தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் முழு உடல்தகுதியுடன் வருவேன்’ என பதிவிட்டுள்ளார்.