WWE மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை

WWE மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை

WWE மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை
Published on

டபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்திய  வீராங்கனை என்ற பெருமையை ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி பெறுகிறார். 

முன்னாள் பளுதூக்கு வீராங்கனையான கவிதா தேவி, துபாயில் அடுத்தமாதம் நடைபெறும்  பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் போட்டியில் பங்கேற்பதை WWE நிறுவனம் உறுதி  செய்துள்ளது. இதற்காக கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட முதற்கட்ட போட்டியில் அவர் பங்கேற்றார்.  அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நடுவர்களின் நன்மதிப்பைப் பெற்ற கவிதா,  பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் துபாய் ட்ரை அவுட் தொடரின் ’Mae Young’  பிரிவில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார். WWE போட்டியில் ஏற்கனவே பங்கேற்றுள்ள பஞ்சாப்  மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் காளியின் பயிற்சி மையத்தில் கவிதா பயிற்சி பெற்றவர். அசாம்  மாநிலம் கவுகாத்தியில் கடந்தாண்டு நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின்  பளுதூக்குதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற கவிதா, அந்த போட்டியில் தங்க பதக்கத்தை  வென்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com