வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்!
Published on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடக்கும் பயிற்சிப் போட்டிக்கான, போர்ட் பிரசிடென்ட் லெவன் அணி கேப்டனாக கருண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20  போட்டிகளில் விளை யாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 4- ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. முன்னதாக அந்த அணி, இந்தியாவில் பயிற்சிப் போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி போட்டி 29 ஆம் தேதி நடக்கிறது. வடதோராவில் நடக்கும் இந்த போட்டியில் அந்த அணிக்கு எதிராக போர்ட் பிரசிடென்ட் லெவன் அணி பங்கேற்கிறது. இந்த அணிக்கு கருண் நாயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கருண் நாயர் ஒரு போட்டியில் கூட, ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் போர்ட் பிரசிடென்ட் லெவன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் விக்னேஷுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அணி விவரம்:
கருண் நாயர் (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், அங்கித் பானே, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சக்சேனா, சவுரப் குமார், பசில் தம்பி, அவேஸ்கான், கே.விக்னேஷ், இஷான் பொரேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com