விக்கெட் கீப்பர் சஹா காயம்: தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

விக்கெட் கீப்பர் சஹா காயம்: தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

விக்கெட் கீப்பர் சஹா காயம்: தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
Published on

விக்கெட் கீப்பர் சஹா காயமடைந்துள்ளதை அடுத்து, தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட உடனடியாக தென்னாப்பிரிக்கா செல்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா சென்று கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்ததை அடுத்து, இரண்டாவது டெஸ்டில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் விளையாடிய விக்கெட் கீப்பர் சஹா, காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடிவருகிறார். சஹாவுக்கு காயம் குணமாகாததால் அவர் அடுத்த டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்றும் உடனடியாக இந்தியா திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக சமீபத்தில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிக்கு தேர்வாகி இருந்தார் தினேஷ் கார்த்திக். இப்போது அதற்கு முன்னதாகவே தென்னாப்பிரிக்கா செல்கிறார். 
பார்த்திவ் பட்டேலுக்கு டெஸ்ட் போட்டியில் அதிக அனுபவம் இல்லை என்பதால் தினேஷ் கார்த்திக் அடுத்த டெஸ்ட்டில் களமிறங்குவார் என்று தெரிகிறது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com