"பாகிஸ்தானுடன் விளையாடி நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை"- கபில் தேவ் காட்டம் !

"பாகிஸ்தானுடன் விளையாடி நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை"- கபில் தேவ் காட்டம் !
"பாகிஸ்தானுடன் விளையாடி நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை"- கபில் தேவ் காட்டம் !

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடிதான் இந்தியாவுக்கு நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அக்தர், கொரோனா வைரஸ் தடுப்புக்கான நிதியைத் திரட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று யோசனை கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கபில் தேவ் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பேட்டியில் அக்தர் "இப்போதுள்ள சூழ்நிலையில் அனைவரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள், அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கொரோனா பாதிப்புகள் குறைந்ததும், துபாய் போன்ற நாட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தலாம். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும். மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும், அரசுகளுக்கு இடையிலான உறவும் மேம்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேட்டியளித்துள்ள கபில்தேவ் "அக்தர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியா கிரிக்கெட்டை நடத்தி நிதி திரட்டும் நிலையில் இல்லை. நம்மிடம் போதுமான நிதி இருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் அதிகாரிகள் கொரோனா பாதிப்பை தடுக்கம் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில தொலைக்காட்சிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து அதனை குறைக்கூறி கொண்டு இருக்கின்றனர் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்".

மேலும் தொடர்ந்த கபில் தேவ் "பிசிசிஐ ஏற்கெனவே கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.51 கோடி என்ற தொகையை முதல் கட்டமாக அளித்துள்ளது. நாட்டுக்கு தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் தொகையை கூட பிசிசிஐ அளிக்கும். ஆனால் அதற்காக நிதி திரட்ட வேண்டும் நிலையில் இல்லை.இப்போதுள்ள சூழ்நிலையில் போட்டிகளை நடத்தி வீரர்களை ஆபத்தில் சிக்க வைக்க கூடாது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டியை நடத்துவதன் மூலம் எவ்வளவு நிதியை திரட்டி விட முடியும் ? இன்னும் 6 மாத காலத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com