‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் 

‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் 
‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பரிந்துரை கடிதத்தில் ஒருவரின் பெயரில் எழுத்து பிழையுடன் எழுதியதற்கு கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் இறுதியாக 6 பேரை நேர்காணல் செய்தது. அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைத்தது. அதில் முதலில் ரவி சாஸ்திரி, இரண்டாவதாக மைக் ஹெசன் மற்றும் மூன்றாவதாக டாம் மூடி ஆகிய பெயர்களை பரிந்துரைத்தனர். இதனையடுத்து முதலிடத்திலுள்ள ரவி சாஸ்திரி ஒரு மனதாக இந்திய பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்தக் குழுவின் பரிந்துரையில் மைக் ஹெசனின் பெயரில் எழுத்து பிழை இருந்தது. அதாவது அவரது பெயர் 'Mike Hassen' எழுத்து பிழையுடன் குறிக்கப்பட்டிருந்தது. அவருடைய சரியான பெயர் ‘Mike Hessen’.  இது தொடர்பாக ட்விட்டரில் பலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள், “இந்தக் குழுவினால் ஒரு பெயரை கூட சரியாக எழுத முடியவில்லையே? இவர்கள் எவ்வாறு சரியாக இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுத்திருப்பார்கள்?” எனப் பதிவிட்டுள்ளனர். 

மேலும் சிலர், “பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கெனவே நபரை தேர்ந்தெடுத்து விட்டுதான் நேர்காணலை நடத்தியுள்ளனர். அதனால் தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கவனம் செலுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் மற்றொரு தரப்பினர், “இந்தக் குழு பெயரை தவறாக எழுதியது போலதான் அவர்களின் பயிற்சியாளர் தேர்வு இருந்திருக்கும்” எனக் கூறியுள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com