இந்திய அணிக்கெதிரான டி20 தொடர்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்

இந்திய அணிக்கெதிரான டி20 தொடர்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்
இந்திய அணிக்கெதிரான டி20 தொடர்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று இந்தியா வருகை தந்தது. முதல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், டி20 தொடரில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியிருக்கிறார். இதன்படி நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரின் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com