இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸி., பவுலர் திடீர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸி., பவுலர் திடீர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸி., பவுலர் திடீர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27-ந் தேதி சிட்னியில் நடக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் ட்ரெவர் ஹான்ஸ் கூறும்புோது "கேன் ரிச்சர்ட்சன் புதிதாக பிறந்துள்ள தன்னுடைய குழந்தையுடனும் மனைவியுடனும் நேரத்தை செலவிட விரும்பி, போட்டிகளிலிருந்து விலகுவதாக கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து ஒட்டுமொத்த தேர்வுக் குழுவினரின் அனுமதியுடன் அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் "நாங்கள் எப்போதும் வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் உறுதுனையாக இருப்போம். கேன் ரிச்சர்ட்சனை அணி நிச்சயம் மிஸ் செய்யும். ஆனால் அவரின் கோரிக்கையை நாங்கள் மதித்து அவருக்கு உறுதுணையாக இருப்போம்" என்றார் ட்ரவர் ஹான்ஸ்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com