அவர் ஃபெயிலியர் கோச்: வாக்கார் யூனிசை விளாசும் கம்ரன் அக்மல்!

அவர் ஃபெயிலியர் கோச்: வாக்கார் யூனிசை விளாசும் கம்ரன் அக்மல்!

அவர் ஃபெயிலியர் கோச்: வாக்கார் யூனிசை விளாசும் கம்ரன் அக்மல்!
Published on

வாக்கார் யூனிஸ், பாகிஸ்தான் கிரிக்கெட்டை பின்னுக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல் கூறியுள்ளார்.

சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்த வாக்கார் யூனிஸ், பாகிஸ்தான் கிரிக்கெட்டை சிதைத்துவிட்டார். பரிசோதனை முயற்சி என்று மூத்த வீரர்களை ஓரங்கட்டினார். அவர் பயிற்சியாளராகத் தோல்வியடைந்துவிட்டார். அவரால் பாகிஸ்தான் அணி, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அவருக்கும் அணியில் இருந்த சில வீரர்களுக்கும் பிரச்னை இருந்தது உண்மைதான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எப்படி முன்னேற்ற வேண்டும் என்கிற திட்டம் ஏதும் அவரிடம் இல்லை. பாப் வுல்மர் உட்பட பல பயிற்சியாளர்களின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன். அவர்களிடம் திட்டமும் வீரர்களிடம் நெருங்கிய நட்பும் இருந்தது. ஆனால், வாக்காரிடம் இது எதுவும் இல்லை. வாக்கார் சிறந்த வீரர் என்றாலும் சிறந்த பயிற்சியாளர் இல்லை’ என்றார் கம்ரன் அக்மல்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர், பயிற்சியாளரை வெளிப்படையாக இப்படி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com