விளையாட்டு
சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதுவரான கமல்
சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதுவரான கமல்
புரோ கபடி தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்க்கையின் போராட்டங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் கமல்ஹாசன், கபடி யுத்தத்தில் தங்களது வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என தமிழ் தலைவாஸ் அணி தெரிவித்துள்ளது. நம் முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கு ஒரு பங்கு இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும், மனதில் பெருமை பொங்க , கோட்டைத் தாண்டி புகழை சூடுங்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரை உரிமையாளராகக் கொண்டுள்ள தமிழ் தலைவாஸ் அணி, புரோ கபடி லீக் தொடரில் முதல் முறையாகக் களம் காண்கிறது. ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது.