ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரபாடா

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரபாடா
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரபாடா

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 7 ம் தேதி தொடங்கும் நிலையில் தென்ஆப்பிரிக்காவின்  ரபாடா டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
 
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.  சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரான இவர், தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்டின்போது முதுகு வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல்-யில் அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது இருந்தது. தற்போது முதுகுவலியால் மூன்று மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் 11 ஐபிஎல் சீசனில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com