u mumba team
u mumba teamPT

2024 புரோ கபடி லீக் | யு மும்பா அணியின் பிரிவியூ! பலம், பலவீனம் என்ன?

2024 புரோ கபடி லீக்கானது வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 9-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
Published on

பி.கே.எல்லின் முதல் சீசனையே 'நீ பொட்டு வச்ச தங்கக்குடம்' என கெத்து தினேஷாகத்தான் ஆரம்பித்தது யு மும்பா அணி. முதல் சீசனில் இரண்டாமிடம். இரண்டாவது சீசனிலேயே சாம்பியன். அவ்வளவுதான். அதோடு எல்லாமே மலரும் நினைவுகளாகிப் போனது. அதன்பின் பீச்சில் சின்னப்பையன்களிடம் அடிவாங்கும் சென்னை 28 ஷார்க்ஸ் டீம் போல கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கரைந்தே போய்விட்டது. கடந்த மூன்று சீசன்களாக ப்ளே ஆஃப்பிற்குக்கூட தகுதி பெறவில்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அப்படியே மும்பை இந்தியன்ஸ் அணியைப் போலவே.

ஏலத்திற்கு முன்னதாக மொத்தமாக டிபென்ஸ் டிபார்ட்மென்ட்டை கலைத்துவிட்டது அணி நிர்வாகம். இத்தனைக்கும் சுரீந்தர் சிங், கிரிஷ் மாருதி எர்னாக், மஹிந்தர் சிங்,  அவர்கள் ரிலீஸ் செய்தது எல்லாமே பெரிய தலைக்கட்டுக்கள். ஆனால் அவர்களிடையே நிலவிய ஈகோ கடந்த சீசனில் அணியின் பெர்ஃபாமன்ஸை பாதிக்கவே, இந்த முடிவு. தப்பிப் பிழைத்தது மும்பையின் ஆஸ்தான ரைட் கார்னர் டிபென்டரான ரிங்கு மட்டுமே. எனவே எப்படியும் ஏதாவது ஒரு ஸ்டார் டிபென்டரை அதிகவிலை கொடுத்து எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காதது மும்பை அணிக்கு அடித்த ஜாக்பாட்டைத்தான்.  

பி.கே.எல்லின் கவர் டிபென்டர்களுள் மிக முக்கியமானவரும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி ஒன்பதாவது சீசனில் கோப்பை வெல்லக் காரணமான கேப்டனுமான சுனில் குமாரை 1.015 கோடிக்கு சுருட்டினார்கள். அவருக்கு பக்கபலமாய் பர்வேஸ் பெய்ன்ஸ்வாலும் சல்லிக்காசுக்கு கிடைக்க, எதிரணியினர் காதில் புகை. கடந்த சீசனில் கலக்கிய இரான் ரெய்டர் ஜஃபர்தனேஷுக்குத் துணையாய் மஞ்சித்தை 80 லட்சம் கொடுத்து எடுத்தார்கள். யு மும்பா அணி நிர்வாகத்திற்கு தமிழக வீரர்கள் மீது எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. காரணம், அணியின் சி.இ.ஓ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஏற்கெனவே இரண்டு தமிழக வீரர்களைத் தக்க வைத்திருந்த நிலையில் ஏலத்திலும் இரண்டு தமிழக வீரர்களை எடுத்து பாசமழை பொழிந்தார்கள்.

இப்படி பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த இந்த வீரர்கள் ரசிகர்களின் பல்லாண்டுக்கால கனவை நிறைவேற்றுவார்களா? அணி நிர்வாகம் இவர்கள்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவார்களா?

u mumba team
2024 மகளிர் டி20 உலகக்கோப்பை| தோற்றது PAK.. அரையிறுதியில் NZ! குரூப் சுற்றோடு வெளியேறியது இந்தியா!

பலம்:

முன்னொரு காலத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் ஒரு ஜோடி இருந்தது. நான்கு சீசன்கள் அந்த அணிக்காக விளையாடிய அந்த ஜோடி மொத்தமாய்க் குவித்தது 465 டிபென்ஸ் புள்ளிகளை. ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் அந்த ஜோடியை அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது மும்பை நிர்வாகம். சுனில் - பர்வேஸ் தான் அந்த இரட்டையர்கள். கவர் டிபென்டர்களில் அதிக புள்ளிகள் எடுத்தவர்களின் பட்டியலில் சுனிலுக்கு இரண்டாமிடம். பர்வேஸுக்கு மூன்றாமிடம். இவர்கள் இருக்கையில் கவர் ஏரியாவில் கால் வைப்பது கண்ணிவெடி மேல் கால்வைப்பதைப்போலத்தான். போக சுனில் கோப்பை வென்ற கேப்டனும்கூட என்பதால் களத்தில் வியூகங்களுக்கு பஞ்சமிருக்காது.

ரைட் கார்னரில் களமிறங்கப்போகும் ரிங்குவுக்கு மும்பை முகாமில் இது நான்காவது சீசன். இதுவரை மும்பைக்காக 50 போட்டிகளில் களம் கண்டிருக்கும் ரிங்கு எதிராளிகளை பதம் பார்த்து சேர்த்துவைத்திருப்பது 147 புள்ளிகளை. டேக்கிள் சராசரி 2.94. பி.கே.எல் வரலாற்றில் ஐந்தாவது பெஸ்ட் டேக்கிள் சராசரி இது. இந்த மும்மூர்த்திகளும் டிபென்ஸ் ஏரியாவை கழுகுக்கண்களோடு பாதுகாப்பார்கள்.

u mumba team
பாபர் அசாமுக்கு மாற்று இவரா? ஊடக விமர்சனங்களை கடந்து சதமடித்த PAK வீரர்.. பாராட்டி பதிவிட்ட அஸ்வின்!

பலவீனம்:

முதன்மை ரெய்டர் பொதுவாக ஒரு சீசனில் குறைந்தது 150லிருந்து 200 புள்ளிகளாவது எடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. புனேரி பல்தான் போன்ற ஒன்றிரண்டு அணிகள் மட்டுமே இந்த விதியிலிருந்து விலகி வென்று காட்டியிருக்கின்றன, போன சீசனில் மும்பை அணிக்கு ரெய்டர்கள் யாரும் பெரிதாய் பங்களிக்காததுதான் அந்த அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட முக்கியக் காரணம். அதிகபட்சமாய் ஜஃபர்தனேஷ் மட்டுமே 148 புள்ளிகள் எடுத்தார். இந்தமுறை அவருக்குத் துணையாய் களமிறங்கப்போகும் மஞ்சித்தும் சீசனுக்கு அதிகபட்சமாய் 120 புள்ளிகள் மட்டுமே எடுப்பார். மூன்றாவது ரெய்டருக்கு சதீஷ் கண்ணன், தனசேகர், விஷால் செளத்ரி, அஜித் செளகான் என ஆப்ஷன்கள் இருந்தாலும் இவர்கள் யாருக்குமே பி.கே.எல் அனுபவம் இல்லை. தனியாளாய் இக்கட்டான நேரங்களில் பாயின்ட்களை குவித்து அணியை மீட்டெடுக்கும்படியான ஒன் மேன் ஷோவை இந்த அணியில் யார் செய்வார்கள் என்பதுதான் குழப்பத்திற்குரிய கேள்விக்குறி.

லெப்ட் கார்னருக்கு லோகேஷ் கோஸ்லியா, சோம்பீர் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் இருவருக்குமே பி.கே.எல் அனுபவம் மிக மிகக் குறைவுதான். கவர், ரைட் கார்னரில் கால் வைக்க முடியாதென்பதால் இந்த லெப்ட் கார்னர் வீக்னெஸை எதிரணிகள் பெரிதாய் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

u mumba team
பாபர் அசாமுக்கு மாற்று இவரா? ஊடக விமர்சனங்களை கடந்து சதமடித்த PAK வீரர்.. பாராட்டி பதிவிட்ட அஸ்வின்!

கவனிக்கப்பட வேண்டிய வீரர் :

நெடுநெடுவென உயரம், சல்லென பாயும் வேகம் - இவையே ஜஃபர்தனேஷின் அடையாளம். இரானின் எதிர்காலம் என அந்நாட்டு கபடி ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். கடந்த சீசனில் மும்பைக்காக களம் கண்டபோது பி.கே.எல் ரசிகர்களும் இவரை சிலாகிக்கத் தொடங்கினார்கள். மஞ்சித் கொஞ்சம் சீனியர்தான் என்றாலும் இந்த சீசனில் மும்பையின் முகமாக ஜஃபர்தனேஷே இருப்பார் என ஆரூடம் சொல்கிறது கபடி வட்டாரம். போன சீசனைவிட சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தும்பட்சத்தில் யு மும்பா காத்துவாக்கில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் போய்விடும்.

u mumba team
”100 போட்டியில் ஆடியிருந்தாலும் ZERO அனுபவம்” - ஸ்மிரிதி உள்ளிட்ட மூத்த வீரர்களை சாடிய இந்திய வீரர்!

ப்ளேயிங் செவன் :

அணியில் மூன்றாவது ரெய்டராக யார் களமிறங்குவார் என்கிற குழப்பம் சீசன் நெடுக இவர்களைத் துரத்தும் என்றே தோன்றுகிறது. இருக்கும் வீரர்களில் சதீஷ் கண்ணன் மூன்று போட்டிகள் ஆடிய சீனியர் என்பதால் அவர் இறங்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஜஃபர்தனேஷ் (ரெய்டர்), மஞ்சித் (ரெய்டர்), சதீஷ் கண்ணன் (ரெய்டர்), பர்வேஸ் பெய்ன்ஸ்வால் (லெப்ட் கவர்), சுனில் (கேப்டன் - ரைட் கவர்), சோம்பீர் (லெப்ட் கார்னர்), ரிங்கு (ரைட் கார்னர்).

ஒருபக்கம் சூப்பர் சீனியர்கள். மறுபக்கம் ஒரு சீசன் வயதுகூட ஆயிடாத ஜூனியர்கள். ஆனாலும் மற்ற அணிகளைப் போல அப்பட்டமாய் தெரியும் பலவீனங்கள் எதுவும் இந்த அணிக்கு இல்லை. பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு மட்டுமே  இந்த வீரர்களுக்கு இருக்கிறது. இளமையும் அனுபவமும் கலந்த யு மும்பா அந்தப் பணியை செய்துமுடிக்குமா என்பதுதான் இறுதியாய் தொக்கி நிற்கும் கேள்வி. 

u mumba team
"1000 கோடி எல்லாம் குறைவு; 2000 கோடி வசூலை எதிர்பார்க்குறேன்" - கங்குவா வசூல் குறித்து தயாரிப்பாளர்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com