உசைன் போல்ட்டுடன் மீண்டும் ஓட ஆசை: ஜஸ்டின் கேட்லின்

உசைன் போல்ட்டுடன் மீண்டும் ஓட ஆசை: ஜஸ்டின் கேட்லின்

உசைன் போல்ட்டுடன் மீண்டும் ஓட ஆசை: ஜஸ்டின் கேட்லின்
Published on

உசைன் போல்ட்டுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்க விரும்புவதாக ஜஸ்டின் கேட்லின் தெரிவித்துள்ளார்.

தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக பிரேசிலில் நடைபெற்ற தடகளப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் வெற்றி பெற்றார். 100 மீட்டர் பந்தய இலக்கை அவர் 10.52 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார். பிரேசிலின் பாலோ ஆண்ட்ரே இரண்டாவது இடமும், பெட்ருசியோ பெரெரியா மூன்றாவது இடமும் பிடித்தனர். 
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேட்லின், நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டதால் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட்டை வெல்ல முடிந்ததாகக் கூறினார். அவருடன் மீண்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் ஜஸ்டின் கேட்லின் தெரிவித்தார். ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றுவிட்டார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com