\
மருத்துவமனையில் மனைவி: லண்டன் பறந்தார் ’மன்கட்’ பட்லர்

மருத்துவமனையில் மனைவி: லண்டன் பறந்தார் ’மன்கட்’ பட்லர்

மருத்துவமனையில் மனைவி: லண்டன் பறந்தார் ’மன்கட்’ பட்லர்
Published on

குழந்தை பெறுவதற்காக மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஜாஸ் பட்லர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார் பட்லர். பஞ்சாப் கேப்டன் அஸ்வினால், மன்கட் முறையில் ஆட்டமிழந்ததால் பரபரப்பாகப் பேசப்பட்ட பட்லர், தனது நீண்டநாள் காதலி லூயிஸை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் லூயிஸ், பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது முதல் குழந்தையை எதிர்நோக்கும் பட்லர் தற்போது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நேற்று இங்கிலாந்து திரும்பினார். அவர் இல்லாதது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் அவர் 311 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 38.8, ஸ்டிரைக் ரேட் 151.7 ஆகும்.

ஏற்கனவே சிஎஸ்கே ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே (இவரும் இங்கிலாந்துதான்) வும், முதல் குழந்தையை எதிர்பார்ப்பதற்காக, இந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com