விளையாட்டு
இங்கிலாந்து வீரர் பட்லருக்கு போட்டி சம்பளத்தில் 15% அபராதம்
இங்கிலாந்து வீரர் பட்லருக்கு போட்டி சம்பளத்தில் 15% அபராதம்
தென்னாப்ரிக்க வீரர் வெர்னான் பிலாண்டரை களத்தில் அவதூறான வார்த்தைகளில் திட்டியதற்காக, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தென்னாப்ரிக்க அணிகள் இடையில் அனல் பறந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பிலாண்டரை பந்து வரும் திசையில் இருந்து விலகி நிற்கும்படி பட்லர் ஆபாச வார்த்தைகளில் கடிந்தார். இது ஸ்டம்ப் மைக்குகளில் தெளிவாக பதிவாகியிருந்த நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பட்லருக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பட்லரின் நடவடிக்கைக்கு, போட்டி சம்பளத்தில் 15 சதவீதத்தை அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.