இந்திய அணியில் யார் பெஸ்ட் ஃபீல்டர்? ஜான்டி ரோட்ஸ் கணிப்பு

இந்திய அணியில் யார் பெஸ்ட் ஃபீல்டர்? ஜான்டி ரோட்ஸ் கணிப்பு

இந்திய அணியில் யார் பெஸ்ட் ஃபீல்டர்? ஜான்டி ரோட்ஸ் கணிப்பு
Published on

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றுக்காக, சென்னை வந்த அவரிடம் செய்தியாளர்கள் பேசினர்.

அப்போது அவர் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு அவரை அதில் தொடர செய்திருக்கிறது. 

தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பாரா? என்று கேட்கிறார்கள். சச்சின் தனது 16வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். கிட்டத்தட்ட 40 வயது வரை களத்தில் நீடித்த அவர் 24 ஆண்டுகள் விளையாடி சில இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.  அவரை போன்று கோலியால் நீண்ட காலம் விளையாட முடியுமா என்பது தெரியவில்லை. கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை அபாரமாகத் தொடங்கி இருக்கிறார். ஆனாலும் இரண்டு பேரையும் ஒப்பிடக்கூடாது. 

இந்திய அணியில் யார் சிறந்த ஃபீல்டர் என்று கேட்கிறார்கள். யுவராஜ்சிங், முகமது கைப் சிறப்பான வகையில் பீல்டிங் செய்துள்ளனர். தோனியும் விராட் கோலியும் கூட அப்படியே. ஆனால் என்னை பொறுத்தவரை இந்தியாவில் சிறந்த பீல்டராக சுரேஷ் ரெய்னாவை சொல்வேன். எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மவுசு குறையுமா? என்று கேட்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எந்த பிரச்சினையும் வராது. டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டி இப்போது விறுவிறுப்படைந்துள்ளது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com