கிரிக்கெட்டில் இருந்து ஆஸி.வேகம் ஜான்சன் ஓய்வு

கிரிக்கெட்டில் இருந்து ஆஸி.வேகம் ஜான்சன் ஓய்வு

கிரிக்கெட்டில் இருந்து ஆஸி.வேகம் ஜான்சன் ஓய்வு
Published on

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் மிட்செல் ஜான்சன். 73 டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுகளையும், 153 ஒரு நாள் போட்டிகளில் 239 விக்கட்டுக்களையும், 30 டி20 போட்டிகளில் விளையாடி 38 விக்கட்டுக்களையும் பெற்றுள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் பிக்பாஷ், ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற டி20 லீக் தொடர்களில் ஆடி வந்தார். ஐபில் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வந்த இவர், இந்தாண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். அவரது ஃபார்ம் சிறப்பாக இல்லாததால் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இப்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்த் நவ் என்ற இதழில் இதை தெரிவித்துள்ளார்.

அதில், `முடிந்துவிட்டது. நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன். கடைசி விக்கெட்டையும் எடுத்துவிட்டேன். இன்று முதல் எல்லா விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதை அறிவிக்கிறேன். அடுத்த வருடம் வரை டி20 தொடர்களில் விளையாட முடியும் என்று மனதளவில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் எனது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

ஒருவேளை அப்படி விளையாடி 100 சதவிகிதம் அணிக்கு ஒத்துழைப்பு தரமுடியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. கிரிக்கெட்டில் எனக்கு அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் பயிற்சியளிக்கும் அளவுக்கு அனுபவங்கள் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com