"இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் நிறவெறி" - முன்னாள் அம்பயர் குற்றச்சாட்டு!

"இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் நிறவெறி" - முன்னாள் அம்பயர் குற்றச்சாட்டு!
"இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் நிறவெறி" - முன்னாள் அம்பயர் குற்றச்சாட்டு!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டு காலமாக நிறவெறி இருப்பதாக முன்னாள் அம்பயர் ஜான் ஹோல்டர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

"ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ" இணையதளத்துக்கு பேசிய ஜான் ஹோல்டர் " இங்கிலாந்தில் 56 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். நான் நேரடியாக எந்தவொரு இனவெறி நடவடிக்கைகளுக்கும் ஆளானதில்லை. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நியமனங்களை ஊடுருவிப் பார்த்தால் அதில் நீண்டகாலமாக இனவெறி கலாசாரம் இருப்பது தெரிய வரும். நான் ஐசிசி-க்காக பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட பிறகு இங்கிலாந்து கிரிக்கெட்டில் பணியாற்ற வாரியத்தை தொடர்புகொண்டேன். ஆனால் அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை." என்றார்.

மேலும் பேசிய அவர் "அதற்குப் பதிலாக நடுவராக அனுபவம் இல்லாத முன்னாள் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளித்தார்கள். இது நகைப்புக்குரியது. இறுதியாக கடந்த 1992-இல் வெள்ளையினத்தைச் சாராத வான்பர்ன் ஹோல்டர் முதல்தர கிரிக்கெட்டுக்கான நடுவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு வெள்ளையினத்தைச் சாராத வேறு எவருமே அந்த கிரிக்கெட்டில் நடுவராக நியமிக்கப்பட்டதில்லை. சிறந்த கிரிக்கெட் வீரரான டிவோன் மால்கம்முக்கே அதில் வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் எனக்கு எவ்வாறு வாய்ப்பு கிடைக்கும் ? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜான் ஹோல்டர்.

தொடர்ந்து பேசிய அவர் "வெள்ளையினத்தவர்களையே முதல்தர கிரிக்கெட்டுக்கான நடுவராக நியமிக்க வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதாக சந்தேகிக்கிறேன். இதுகுறித்து சுதந்திர அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார் ஜான் ஹோல்டர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com