தொடருது ஜோகன்னஸ்பர்க் சென்டிமென்ட்: விக்கெட் வீழ்ச்சியில் சாதனை!

தொடருது ஜோகன்னஸ்பர்க் சென்டிமென்ட்: விக்கெட் வீழ்ச்சியில் சாதனை!
தொடருது ஜோகன்னஸ்பர்க் சென்டிமென்ட்: விக்கெட் வீழ்ச்சியில் சாதனை!

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த மைதானத்தில் இந்திய அணி, தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது இந்திய கிரிக்கெட் அணி. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது. இதன் மூலம் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. இங்கு இதுவரை 5 டெஸ்டில் பங்கேற்றுள்ள இந்திய அணி, 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் சந்தித்துள்ளது.

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணிக்கான மூன்றாவது டெஸ்ட் வெற்றி இது. 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி, இதே மைதானத்தில் நடந்த டெஸ்டில் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. 2010-ம் ஆண்டு தோனி தலைமையில், டர்பனில் நடந்த டெஸ்டில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இந்த தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்தன. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தது, கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் ’பர்ஸ்ட்’.

இந்தத் தொடரில் ஒரே ஒரு செஞ்சுரி மட்டுமே அடிக்கப்பட்டிருக்கிறது. அது இந்திய கேப்டன் விராத் கோலியால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்டது. 

டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது போட்டி, வரும் 1-ம் தேதி டர்பனில் நடக்கிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com