\
ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்: ஆர்ச்சர் மிஸ்சிங்!

ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்: ஆர்ச்சர் மிஸ்சிங்!

ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்: ஆர்ச்சர் மிஸ்சிங்!
Published on

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் போட்டியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரசிகர்களைக் கொண்டது அனல் பறக்கும் ஆஷஸ் தொடர். 2019ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது. 5 ‌போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு டிம் பெய்னும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குகின்றனர். 

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்பவுள்ளார். இருப்பினும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்குப்பின் முதல் முறையாகக் களம் காண்கின்றனர். மேலும் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com