\
ஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர் வேகத்தில் அடங்கியது ஆஸி!

ஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர் வேகத்தில் அடங்கியது ஆஸி!

ஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர் வேகத்தில் அடங்கியது ஆஸி!
Published on

இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் அனல் பறக்கும் பந்துவீச்சால், ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 179 ‌ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

லீட்ஸ் நகரில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஜோப்ரா ஆர்ச்சரின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக் கெட்டுகளை‌ இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வீரர், டேவிட் வார்னர், நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய லாபஸ்சானே‌ இணைந்து சீரான ரன்கள் சேர்த்தனர்.

வார்னர் 61 ரன்களும், லாம்பஸ்சான் 74 ரன்களும் எடுத்தனர். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அந்த அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஸ்டூவார்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com