சப்பாத்தி செய்யும் ஜிவா: இணையத்தை கலக்கும் வீடியோ
முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா, மும்முரமாக சப்பாத்தி உருட்டும் வீடியோ இணையத்தில் பல லைக்குகளை அள்ளி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இணையத்தில் அடிக்கடி பேச்சப்படும் இவர், கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் அதிரடியான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இவரின், ஹெலிகாப்டர் ஷாட்டிலில் தொடங்கி, சமீபத்தில் இவர் தனது மனைவிக்காக நடனம் ஆடிய வீடியோ வரை அனைத்து வீடியோவும் வைரல் ரகம் தான். தனது அழகான சிரிப்பினால் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைக் கொண்டுள்ள இவரின் மகள் தான் ஜிவா. தனது தந்தையுடன் அடிக்கடி இணையத்தில் போட்டி போடுபவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜிவா மட்டுமே.
சமீபத்தில் ஜிவா கோலியுடன் பேசியது, மலையாளத்தில் பாடல் பாடி அசத்தியது, தனது சுட்டித்தனமான செயல்களால் எப்போதும் இணையத்தில் வைரல் ஆவது என்று ஜிவாவின் சாதனைகள் ஏராளம். இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள வீடியோ தான், தனது தந்தைக்காக ஜிவா மும்முரமாக சப்பாத்தி உருட்டும் அழகு.தனது பிஞ்சு கைகளால் ஜிவா சப்பாத்தி உருட்டுவதை பலர் ரசித்து வருகின்றனர். இந்த வீடியோவை தோனி மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சிறிது நேரத்திற்குள் இது லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு லைக்குகளை அள்ளி வருகிறது.