விளையாட்டு
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய அணிக்கு தங்கம்
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய அணிக்கு தங்கம்
டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜீது ராய், ஹீனா சித்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
இறுதிச் சுற்றில் ஜப்பான், சீனத் தைபே ஆகிய அணிகளின் சவாலை முறியடித்து இந்திய அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் ஜப்பான் அணி வெள்ளிப் பதக்கத்தையும், சீனத் தைபே அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா சார்பில் பூஜா கட்கார், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். தற்றோது இந்திய அணி இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.