இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.
ஜூலன் கோஸ்வாமி 1982ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் நண்பர்கள் மத்தியில் இவர் ‘பபுள்’ என செல்லமாக அழைக்கப்படுவார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய பங்கு வகித்து வந்தனர். இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற வழிவகுத்தவர்.
இதுவரை 10 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 203 விக்கெட்டுகளும், 68 டி20 போட்டிகளில் பந்துவீசி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கோஸ்வாமி தற்போது 6 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோஸ்வாமி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.