\
இலங்கை கிரிக்கெட் அணியை சீரமைக்க 5 பேர் குழு!

இலங்கை கிரிக்கெட் அணியை சீரமைக்க 5 பேர் குழு!

இலங்கை கிரிக்கெட் அணியை சீரமைக்க 5 பேர் குழு!
Published on: 

இலங்கை கிரிக்கெட் அணியை சிரமைக்கும் வகையில் 5 பேர் கொண்ட குழுவை இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில வருடங்களாக மோசமான தோல்விகளை சந்தித்துவருகிறது. இது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு ரசிகர்களும் இலங்கை கிரிக்கெட் அணி மீது அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரில் கூட, முன்னணி வீரர்களான மேத்யூஸ், குணரத்னே, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இது அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியை மேம்படுத்த 5 பேர் கொண்ட குழுவை இலங்கை விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது. 
ஹேமகா அமரசூர்யா தலைமையிலான இந்த குழுவில் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, அரவிந்த டி சில்வா, அனுரா தென்னகூன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு அணியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அறிக்கையாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அளிக்கும். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com