இலங்கை கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஜெயசூர்யா ராஜினாமா

இலங்கை கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஜெயசூர்யா ராஜினாமா
இலங்கை கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஜெயசூர்யா ராஜினாமா

இந்தியா இலங்கை இடையேயான தொடரில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஜெயசூர்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற விகிதத்தில் இலங்கை தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடர் தோல்வி அடைந்தது. இதன் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் சனாத் ஜெயசூர்யா மற்றும் குழு உறுப்பினர்கள் ரஞ்சித், மதுராசிங்கே, ரொமேஷ் கலுவிதர்னா, அஷங்கா குருசின்ஹா மற்றும் எரிக் உபஷந்தா உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா, "சிறந்த கேப்டன் ஆன அர்ஜூனா ரனதுங்கா ராஜினாமா செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அணியின் மோசமான விளையாட்டால் தோல்வி அடைந்ததற்கு, நிர்வாகம் ஒரு போதும் பொறுப்பாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3-4 வருடங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி சமீப காலமாக மட்டுமே மோசமாக விளையாடி வருவதாக கூறிய அவர், ஜிம்பாப்வே போன்ற அணியிடம் அடைந்த தோல்விகளை குறிப்பிட்டார்.

முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான 3 தொடர்களில் இலங்கை அணி சமநிலையைப் பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வியையும் தழுவியது. இதையடுத்து ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 0-3 என்றும், 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் 3 போட்டிகளில் தொடர் தோல்வியும் அடைந்தது. இலங்கையின் இத்தகைய தோல்விகளுக்கு முன்னாள் கேப்டன்கள் சங்கக்காரா மற்றும் ஜெயவர்தனேவின் ஓய்வும், சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லததுமே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com